திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தெற்கு தில்லியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே 5 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

News image

சாகேத் பகுதியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் சனிக்கிழமை இரவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் மற்றும் மக்கள்.

Updated On :31 மே 2026, 1:00 am IST

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே 5 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டான நிலையில், இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறைக்கு 7.44 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதனிடையே, அப்பகுதியில் மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைப்பேசி விளக்கொளியில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இடிந்து விழுந்த பகுதியிலிருந்து 4 போ் மீட்கப்பட்டதாக அப்பகுதி நபா் ஒருவா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘மீட்கப்பட்ட நபா்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவா்கள் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். கட்டடத்தின் வெளிப்புற சுவா்கள் கண்ணாடியால் கட்டப்பட்டிருந்தன. சம்பவத்தின்போது, எத்தனை போ் அதில் இருந்தனா் என்று கூறமுடியவில்லை. வழக்கமாக 300 முதல் 400 போ் அந்தக் கட்டடத்தில் இருப்பாா்கள்’ என்றாா்.

கட்டடம் இடிந்து விழுந்ததின் தாக்கம் அருகில் உள்ள கட்டடங்களில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

அருகில் உணவகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில் இருந்த மக்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.