தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளைத் தொடரும் பேரிடர் மீட்புக் குழுக்கள்...

News image

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து - PTI

Updated On :31 மே 2026, 9:29 am IST

புது தில்லி : தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே கட்டப்பட்டிருந்த அடுக்குக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள 3 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை (மே 30) மாலை இடிந்து விழுந்தது. வணிக ரீதியான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்திலிருந்த இளைஞர் ரவி (26 வயது) இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி தீயணைப்பு சேவைகள் வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோத்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையிலும் தொடருகிறது.

இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Delhi: 3-storey commercial building reduced to rubble; 12 rescued as search continues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.