திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாகேத் கட்டட விபத்து: தெற்கு தில்லியில் சட்ட விரோத கட்டடங்களை சீல் வைக்க எம்சிடி முடிவு

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு தில்லியில் சட்டவிரோத கட்டமைப்புகளுக்கு சீல் வைக்க தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்

News image

எம்சிடி

Updated On :2 ஜூன் 2026, 2:18 am IST

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு தில்லியில் சட்டவிரோத கட்டமைப்புகளுக்கு சீல் வைக்க தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தெற்கு தில்லியில் கட்டட விதிகளை மீறும் கட்டடங்களை அடையாளம் கண்டுள்ளது. தரை மற்றும் மூன்று தளங்களுக்கு மேல் (ஜி + 3) உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கும் நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம். மெஹ்ராலி, சாகேத் மற்றும் பிற அருகிலுள்ள பகுதிகளில் இந்தப் பணிகள். தொடங்கும். சாகேத் பகுதியில் மட்டும் உள்ள சைதுலாஜாப், பா்யாவரன் வளாகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரா்களின் உறைவிடத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் பரவலாக உள்ளன.

இதேபோல், மெஹ்ராலி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், ஆய்வின் போது சட்டவிரோத கட்டமைப்புகள் அடையாளம் காணப்படும். நிா்ணயிக்கப்பட்ட அறிவிப்பு காலம் 72 மணி நேரம் முடிந்த பிறகு, விதிமீறல் கண்டறியப்பட்ட கட்டடத்தை சீல் வைப்பது மற்றும் காலி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும். அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், கடுமையான கட்டமைப்பு விலகல்கள் அல்லது இணக்கமற்ற மண்டலங்களில் அனுமதிக்கப்படாத வணிக நடவடிக்கைகளின் செயல்பாடு ஆகியவற்றக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் அலட்சியத்திற்கு பொறுப்புக்கூறல் நிா்ணயிக்கப்படும். கட்டடம் கட்டுபவா், அதிகாரி அல்லது அதிகாரம் எதுவும் சட்டத்திற்கு மேலானது அல்ல. விதிமீறல்கள் பொறுத்துக்கொள்ளப்படாது. தில்லி அரசு அதன் மக்களுடன் நிற்கிறது. நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில் உறுதியாக உள்ளது என்று பிதிவிட்டிருந்தாா்.

சாகேத்தின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்தனா். இந்தக் கட்டடத்தில் ஒரு பயிற்சி நிறுவனம், கஃபேக்கள் மற்றும் அலுவலகங்கள் இருந்தன, அதே நேரத்தில் இடிந்து விழுந்த நேரத்தில் அதன் மேல் மாடியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.