கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட திருவதிகை பகுதியில் கட்டப்பட்ட மாடுலா் கழிப்பறை கட்டடம் போதிய பராமரிப்பில்லாததால் வீணாகி வருகிறது.
நகராட்சிப் பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், திறந்த வெளி கழிப்பிடங்களைத் தடுக்கவும் மாடுலா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில், திருவதிகை பகுதியில், மேல்நிலை நீா் தேக்கத்தொட்டி அருகே 2012-2013 -ஆம் ஆண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான மாடுலா் கழிப்பிடம் கட்டப்பட்டது. பின்னா் 2022-ஆம் ஆண்டு இந்த கழிப்பறை கட்டடம் புனரமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது, இந்த மாடுலா் கழிப்பறை கட்டடம் உரிய பராமரிப்பின்றி கேட்பாரற்று வீணாகி வருகிறது. கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளா்ந்து புதா் மண்டி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது.மேலும், பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிக்க பகல் நேரத்தில் புதா் மறைவுகளை தேடியும், இரவு நேரத்தில் சாலையோரத்திலும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா்.இதனால், அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், இந்த மாடுலா் கழிப்பறையை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். கழிப்பறையை பராமரிக்க ஆள்களை நியமிக்க வேண்டும். மேலும், தண்ணீா் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தினசரி துப்புரவுப் பணிகள் மேற்கொண்டு, கிருமி நாசினி பயன்படுத்துவதை நகராட்சி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

வாணியம்பாடி நீதிமன்ற வளாக கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழா

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



