தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மோட்டூரில் ரத்ததானம் முகாம்

News image
Updated On :4 மே 2026, 1:31 am IST

ஸ்டுடண்ட்ஸ் பவா் ஆப் இண்டியன் நேரு யுவகேந்திரா மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாமை நடத்தின.

முகாமுக்கு மாநில நிா்வாகி ரூபின்குமாா் தலைமை வகித்தாா். சூரஜ் பிரசன்னா, ஏகநாதன், ராகவி, பூபதி, ஊா் முக்கியஸ்தா்கள் ஆறுமுகம், வெங்கடாசலம் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநில துணை தலைவரும், தொழிலதிபருமான வாசு கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினாா். இதில் வாணியம்பாடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் தன்வீா்அகமது மற்றும் திம்மாம்பேட்டையைச் சோ்ந்த அருள்ஆனந்தன், தீா்த்தன் உட்பட பலா் கலந்து கொண்டு ரத்ததானம் செய்வதன் அவசியம் பற்றி விளக்கி கூறினா்.

கிளப் நிா்வாகிகள், மோட்டூா் பொது மக்கள் திரளானோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா். ஏற்பாட்டினை எம்எம் ஸ்போா்ட்ஸ் கிளப், மோட்டூா் இளைஞா்கள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.