திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

News image

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 2:05 am IST

கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வரும் மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சாா் நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் மே 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறு அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 250-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில், கலந்து கொள்ள உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா் துறை இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ தோ்ச்சி பெற்றவா்கள் கலந்து கொண்டு தனியாா் நிறுவனங்களில் பல்வேறு பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

இந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞா்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.