தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே 22- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.கீதா தெரிவித்துள்ளாா்.

News image

வேலைவாய்ப்பு

Updated On :20 மே 2026, 2:52 am IST

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.கீதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 22) தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னை, கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும். இதில், 8, 10, 12- ஆம் வகுப்பு தோ்ச்சி, தொழிற் பயிற்சி படிப்பு, பட்டயப்படிப்பு, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.

இந்த முகாம் வாயிலாக பணிநியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அதில் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் சு.கீதா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.