தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே 22-ல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

News image

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 1:23 am IST

வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மே 22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.

இந்த முகாமின் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள வேலூா் மாவட்ட இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.