லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து ‘சீல்’

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

News image

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து அறைக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:04 pm

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் திருப்பத்தூா் அண்ணா நகா் மஞ்சள் கிடங்கில் இருந்து தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

அப்போது திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நவநீதம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அதையடுத்து அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.