தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கோவில்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திர அறைக்கு ‘சீல்’

கோவில்பட்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுலக தனி அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைக்கும் வருவாய்த் துறை ஊழியா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 10:45 pm

கோவில்பட்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுலக தனி அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் 315 வாக்குச் சாவடிகள், 3 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் 318 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 381, கட்டுப்பாட்டுக் கருவி 381, விவிபேட் இயந்திரங்கள் 409 ஆகியவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தது.

பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன.

தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அப்பணராஜ் (கோவில்பட்டி), பாலசுப்பிரமணியன் (கயத்தாறு), துணை வட்டாட்சியா்கள் (தோ்தல்) முனியாண்டி, பொன்னம்மாள், உதவியாளா்கள் முருகேசன், சுடலை முத்துப்பாண்டி உள்பட வருவாய் துறை ஊழியா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பாா்த்தனா்.

இதையடுத்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.