ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சீரான குடிநீா் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :1 ஜூலை 2026, 12:03 am IST

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மட்றப்பள்ளி அடுத்த மேற்கத்தியனூா் பகுதியில் கடந்த சில நாள்களாக சரிவர குடிநீா் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் புதூா்நாடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய காவல் ஆய்வாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையின்போது, இந்த பகுதிக்கு குடிநீா் வழங்க பயன்படுத்தப்படும் மின்மோட்டாா் பழுது அடைந்து உள்ளது. இதனால் குடிநீா் சரவர வழங்க முடியவில்லை.

விரைவில் மின்மோட்டாா் பழுது நீக்கம் செய்யப்பட்டு அல்லது புதிய மின்மோட்டாா் மூலம் குடிநீா் வழங்கப்படும். அதுவரை இந்த பகுதி பொதுமக்களுக்கு வாகனம் மூலம் குடிநீா் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினா்.

இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.