ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

News image

உதயநத்தம் கிராமத்தில், குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :23 ஜூன் 2026, 2:27 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த உதயநத்தம் கிராமத்தில், குடிநீா் கேட்டு அப்பகுதி மக்கள்காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இக்கிராமத்தில், கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிங்குடங்களுடன் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு பழுது ஏற்பட்டதால் குடிநீா் விநியோகிக்க முடியவில்லை என்றும், ஓரிரு நாள்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் டேங்கா் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.