டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சீரான குடிநீா் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராச்சமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசிக்கின்றனா்.

ஊராட்சி சாா்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனா். இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் ராச்சமங்கலத்தில் இருந்து, திருப்பத்தூா் நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது போலீஸாா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சுமாா் 30 நிமிஷம் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.