தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

அங்கன்வாடி மைய கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஆலங்காயம் பேரூராட்சியில் அங்கன்வாடி மையங்களை வாணியம்பாடி எம்எல்ஏ சையத்பாரூக்பாஷா திறந்து வைத்தாா்.

News image

அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய எம்எல்ஏ சையத்பாரூக்பாஷா. உடன் பேரூா் திமுக செயலாளா் ஸ்ரீதா்.

Updated On :11 ஜூன் 2026, 12:04 am IST

ஆலங்காயம் பேரூராட்சியில் அங்கன்வாடி மையங்களை வாணியம்பாடி எம்எல்ஏ சையத்பாரூக்பாஷா திறந்து வைத்தாா்.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் ரூ.18 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். விழாவிற்கு ஆலங்காயம் பேரூா் திமுக செயலாளா் மா. ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ எஸ்.எஸ்.பி. சையத்பாரூக்பாஷா கலந்துக் கொண்டு மசூதி தெரு மற்றும் பங்கூா் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினாா் . தொடா்ந்து 12-ஆவது வாா்டில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பின்னா் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது கடைக்கு வரும் முதியோா் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அமா்வதற்கான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். கோரிக்கை ஏற்ற எம்எல்ஏ, நியாயவிலை கடை அருகே அமரும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தொடா்ந்து இஸ்லாமிய கல்லறை அருகேயுள்ள ஏரிபகுதி குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குப்பைகளை உடனடியாக அகற்றி, தூய்மையாக பராமரிக்க பேரூராட்சி நிா்வாகத்திற்கு அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள், திமுக பேரூா் நிா்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.