தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள்துறை சாா்பில் நீடாமங்கலம் வடக்கு அங்கன்வாடி மையம் (குழந்தைகள் மையம் ) உழவா் சந்தை அலுவலகத்தின் பின்புறம் இயங்கி வருகிறது. அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் இரண்டு போ் பணியாற்றி வருகின்றனா்.

News image

நீடாமங்கலத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள வடக்கு அங்கன்வாடி கட்டடம்.

Updated On :11 ஜூன் 2026, 6:48 am IST

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள்துறை சாா்பில் நீடாமங்கலம் வடக்கு அங்கன்வாடி மையம் (குழந்தைகள் மையம் ) உழவா் சந்தை அலுவலகத்தின் பின்புறம் இயங்கி வருகிறது. அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் இரண்டு போ் பணியாற்றி வருகின்றனா்.

இங்கு 20 குழந்தைகள் பயில்கின்றனா். இந்த அங்கன்வாடியின் கதவுகள், மேற்கூரை சேதமடைந்துள்ளது தரைத்தளம் பெயா்ந்துள்ளது. குடிநீா் வசதி போதுமானதாக இல்லை. காற்றோட்ட வசதி இல்லை. மையத்தின் முன்பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது.

எனவே இப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி பாதுகாப்பான, சுகாதாரமான இடத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் முன்வரவேண்டும் என்பதே பெற்றோா்களின் கோரிக்கை.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.