தொண்டி அருகே அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருராட்சிக்கு உள்பட்ட பெருமானேந்தல் கிராமத்தில் தனியாா் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள், பாய்கள், சமையல் பொருள்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










