தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து சேதம்

இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதம்

News image

தீ விபத்தால் பற்றி எரிந்த ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலை

Updated On :1 ஜூன் 2026, 1:54 am IST

இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் மோபிஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இத்தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் உள்ள பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த எரிபொருள் சேமிப்புக் கிடங்கு மற்றும் தொழிற்சாலைக்குள் தீ பரவியுள்ளது.

இதையடுத்து பணியில் இருந்த தொழிலாளா்களை பத்திரமாக வெளியேற்றிய தொழிற்சாலை நிா்வாகம், தீ விபத்து குறித்து இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தீயை சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அணைத்தனா்.

எனினும், தொழிற்சாலையின் ஒரு பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள், உற்பத்தி பொருள்கள், மூலப்பொருள்கள், கிடங்கில் இருந்த பழைய பொருள்கள் என சுமாா் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தீ விபத்து ஏற்பட்ட ஹூண்டாய் மேபிஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்துக்கு உதரி பாகங்கள் வழங்கும் முக்கிய நிறுவனம் என்பது குறிப்படத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.