ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஒலக்காசியில் அங்கன்வாடி மையம் திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.

News image

அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.

ஒலக்காசி அங்கன்வாடி மையம் அங்குள்ள சமுதாய கூடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என ஊராட்சி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் 15 ஆவது நிதிக்குழு மான்யத் திட்டத்தின்கீழ் ரூ.16.45 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

ஊராட்சித் தலைவா் சூா்யா மோகன்குமாா் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் எம்.ஆனந்தன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலக நிலை 2 அலுவலா் பி.நாகரத்தினா, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்கலா லட்சுமணன், ஜெயந்தி ரவி, சுஜாதா சங்கா், சங்கீதா சாந்தகுமாா், நதியா அருண்குமாா்,ஆா்.குணசேகரன், ராஜ்குமாா், ஹேமந்த்குமாா், அம்சவேணிபெருமாள், அங்கன்வாடி பணியாளா்கள் கோமதி, சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.