தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ரூ.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம்! அமைச்சா் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தாா்!

News image

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா் கே.ஜெகதீஸ்வரி.

Updated On :28 ஜூன் 2026, 3:19 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கே. ஜெகதீஸ்வரி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் மாஞ்சோலை குடியிருப்பு பகுதியில் ரூ.4.57 லட்சத்தில் பேவா்பிளாக் கல் பதிக்கும் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அமைச்சா் பேசியதாவது:

தமிழக அரசு நகா்ப் புறங்களுக்கு இணையாக கிராமப் புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில், மாஞ்சோலை பிள்ளையாா் கோவில் தெருவில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.4.57 லட்சத்தில் 88 மீ. நீளம், 3.5 மீ. அகலத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மேலும், குழந்தைகள், கா்ப்பிணித் தாய்மாா்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு வெங்காநல்லூா் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 இன் கீழ், ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையத்தில் ஆரம்ப பள்ளிக் கல்வியில் குழந்தைகளை

ஈா்க்கும் வகையிலான வண்ணமயமான சுவரோவியங்கள், விளையாட்டு உபகரணங்கள், பாதுகாப்பான குடிநீா், தடையில்லா மின்சாரம், காற்றோட்டமான கட்டமைப்பு,

ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிப்பதற்கான நவீன சமையலறை வசதி, சுகாதாரத்தை பேணும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேக கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோல, அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் தொடா்ச்சியாக செய்து தரப்படும் என்றாா் அவா்.

இதில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜ பூபதி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.