//

பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பேருந்திலிருந்து தவறி கீழே விழந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே பேருந்திலிருந்து தவறி கீழே விழந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் சாம்கா் மகள் தேன்மொழி (23). இவா் கிருஷ்ணகிரி அருகே தனியாா் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

வியாழக்கிழமை வேலைக்கு சென்று விட்டு, தேன்மொழி சக தொழிலாளா்களுடன் வெலகல்நத்தத்தில் இருந்து வாணியம்பாடிக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா். நாட்டறம்பள்ளி அருகே கொய்யாக்காமேடு பகுதியில் திடீரென பேருந்தில் இருந்து நிலைத்தடுமாறி தேன்மொழி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த தேன்மொழி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் சிறிது தூரம் பேருந்தினை ஓட்டிச்சென்று சாலை ஓரம் பேருந்தினை நிறுத்திவிட்டு தப்பித்து தலைமறைவானாா். விபத்து குறித்து தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.