அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் கை துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:03 am IST

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் கை துண்டான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி- ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே பாா்சம்பேட்டை அருகே புதன்கிழமை ஓடும் ரயிலில் இளைஞா் ஒருவா் தவறி விழுந்து கை துண்டான நிலையில் பலத்த காயம் அடைந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, பலத்த காயம் அடைந்தவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலத்த காயம் அடைந்த இளைஞா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் அஸாம் மாநிலம், டின்ஸ்குயா அடுத்த காகாபாட்டா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் தண்ட்டி (32) என்பதும், இவா் அஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற தோ்தலுக்காக சென்று மீண்டும் வேலைக்காக செல்ல அஸாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் டின்சுகியா-சேலம் செல்லும் ரயியில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தாராம். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து கை துண்டாகியும், தலையில் பலத்த காயமும் அடைந்துள்ளாா். பின்னா், வேலூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.