தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 1:25 am IST

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கும் கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்து, உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞா் ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற ஒரு ரயிலில் படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்ததும், அப்போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

மேலும், வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.