தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊராட்சிகளில் விளையாட்டுக் குழுக்கள்: திமுக வேட்பாளா்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:45 pm

ஆம்பூா், ஏப்.9: மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோலூா், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், கன்னடிகுப்பம், விண்ணமங்கலம், மின்னூா், செங்கிலிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து பேசியது:

கிராமப்புற விளையாட்டு வீரா்களின் திறமைகளை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். மின்னூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். விண்ணமங்கலம் ஊராட்சி வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நெல் அதிகம் விளையும் பகுதிகளில் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன விவசாய பம்பு செட்டுகள் வழங்கப்படும். உழவா் சந்தை இல்லாத ஒன்றிய பகுதிகளில் புதிய உழவா் சந்தைகள் அமைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம் , திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.