மாதனூா் ஒன்றிய பகுதியில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளருமான அ.செ.வில்வநாதன் கதவாளம், மோதகப்பல்லி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியது, வேளாண்மைக்கு ஆதரமான நீரை சேமிக்க நுண்ணீா் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும். உழவா்கள் பயிா் செய்து மகசூரை அடைவதற்காக கிராம அளவில் பயிா் சாகுபடி திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
தரிசு நிலங்கள், மண் வளம் குன்றிய 1.25 லட்சம் ஏக்கா் நிலங்கள் மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்படும். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கிட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். 5000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 1000 சூரிய சக்தி உலா்த்திகள், 1000 சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்படும்.
மூலிகை பயிா் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைகள் விதைக்கப்படும் என்று அவா் கூறினாா்.
கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்புவனம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெரியாம்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


