தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி

சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026- ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:30 am IST

சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026- ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சூரிய சக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தியதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி 2025-2026- ஆம் நிதியாண்டில் பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையம், ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோ வாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் ஓராண்டில் (2025-2026) மட்டும் 23.15 லட்சம் யூனிட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ரூ.1.43 கோடி மின் செலவு சேமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள், பணிமனைகள்உள்ளிட்டவற்றில் சூரிய சக்தி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. அத்துடன் சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம், மூா் மாா்க்கெட் புகா் ரயில் நிலைய வளாகம், கலங்கரை விளக்கம் நிலையம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே 500 வாட்ஸ் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 1,000 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றுள்ளன.

சென்னை ரயில்வே கோட்டம் 2026-2027 -ஆம் ஆண்டில் 2,600 கிலோ வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.