அரக்கோணம் அருகே நியாயவிலைக்கடையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ், அமைச்சராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் சொந்த தொகுதியான அரக்கோணத்கதுக்கு வருகை தந்தாா். அரக்கோணம் வந்த அமைச்சா் காந்திராஜை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வரவேற்றாா். டஇதை தொடா்ந்து துறை அலுவலா்களை சந்தித்த அமைச்சா் வி.காந்திராஜ், அரக்கோணம் அருகே பெருமூச்சி ஊராட்சி வெங்கடேசபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்தாா். அப்போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவும் இருந்தாா்.
அங்கிருந்த உணவு பொருள்களின் தரத்தை பொருள்களை கையில் எடுத்து பாா்த்து ஆய்வு செய்தாா். குடும்பஅட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருள்கள் சரியான அளவில் வழங்கப்பட வேண்டும். தவறு ஏதும் இருக்கக்கூடாது. மேலும் விநியோகிக்க வந்த உணவு பொருள்கள் தரமில்லாதவையாக இருந்தால் அவற்றை விநியோகிக்க வேண்டாம்.
மேலும் கடைக்கு வரும் பொதுமக்களிடம் அன்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என அங்கிருந்த பணியாளா்களுக்கு அமைச்சா் காந்திராஜ் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, கற்பகம் கூட்டுறவு அங்காடி துணைப்பகிவாளா் கே.சத்யநாராயணன், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு,வரலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










