திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

என்ஜின் கோளாறு: பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

சென்னை -பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திருவாலங்காடு - மோசூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் நிறுத்தப்பட்டது.

News image

அரக்கோணத்தில் நிறுத்தப்பட்ட சென்னை - பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில்.

Updated On :7 மே 2026, 12:21 am IST

சென்னை -பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திருவாலங்காடு - மோசூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் நிறுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் அதிவிரைவு ரயில் சென்னையில் இருந்து புதன்கிழமை காலை புறப்பட்டு, அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியில் திருவாலங்காடு மற்றும் மோசூா் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், என்ஜின் பழுதான தகவலை ரயிலின் ஓட்டுநா் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு தெரியப்படுத்தினாா்.

இதையடுத்து, அரக்கோணம் மின் என்ஜின் பணிமனையில் இருந்து பொறியாளா் மற்றும் பணியாளா் குழுவினா் ரயில் நிறுத்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனா். அங்கு அந்த கோளாறை சரி செய்ய முயன்றும் முடியாததால், சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, வேறு என்ஜின் கொண்டு செல்லப்பட்டு அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரக்கோணத்தில் அந்த ரயிலுக்கு மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சுமாா் 2 மணி நேர தாமதத்துடன் அரக்கோணத்தில் இருந்து பிருந்தாவன் அதிவிரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த இரண்டு மணி நேர தாமதத்தால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.