மேல்விஷாரம் நகராட்சியில் நெகிழி பொருள்கள் பறிமுதல்


ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய அரசின் சுற்று சூழல் துறை மாசுக்கட் டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலா் சித்தா சாயிலு, களப்பணியாளா் விஸ்வநாதன் ஆகியோா் தலைமையில் நகராட்சி ஆணையா் கோ.பழனி முன்னிலையில் ராணிப்பேட்டை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா், உதவி பொறியாளா் சு.சபரிநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ம.கண்ணன் மற்றும் பணியாளா்களுடன் மேல்விஷாரம் அண்ணாசாலை, கத்தியவாடிசாலையில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், 5 கடைகளில் தடை செய்யப் பட்ட 50 கிலோ நெகிழி பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நகராட்சிக்கு சொந்தமான வளமீட்பு மையத்தில் நெகிழி பொருள்கள் அழிக்கப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...