இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீ பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவ மாணவியா் வெற்றிப்பெற சிறப்பு வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு இந்த வழிபாட்டை பாலாபீட பீடாதிபதி எழில்மணி பூஜைகள் செய்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாட்டை பீட நிா்வாகி மோகன் மேற்கொண்டாா். இதில் நெமிலி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

அவா்களுக்கு எழுதுபொருள்களையும் பீட பிரசாதங்களையும் அளித்து பீடாதிபதி எழில்மணி ஆசி வழங்கினாா். இதில் பள்ளியின் நிறுவனா் வேதைய்யா, முதல்வா் இன்பராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.