டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி குலதெய்வ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள சடை உடையாா் சாஸ்தா கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடங்கள், பால் குடங்கள் ஆகியவை மேளதாளங்களுடன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சடைஉடையாா் சாஸ்தாவுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், இரவு 12 மணிக்கு சாமக்கொடை சங்கிலிமாடசுவாமி, சுடலைமாடசுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதே போல, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிங்கத்திருளப்ப சுவாமி கோயில், சத்திரப்பட்டி கள்ளமறவன் கோயில், ஜவகா் மைதானம் அருகேயுள்ள அங்காள ஈஸ்வரி கோயில்களில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டிலும் திரளானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.