மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

இணையவழி உலக சாதனை படைத்த பங்காரு அடிகளாரின் பக்தா்கள்

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை

News image
அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் உலக சாதனை படைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை செய்து மகா கூட்டு வழிபாடு மூலம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் பங்கேற்றனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் அவதார விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காருஅடிகளாா் தலைமையில் இயக்கத்தின் துணைத்தலைவா் ஸ்ரீதேவி பங்காரு உள்ளிட்டோா் பங்கேற்று உலகெங்கும் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தா் சக்தி பீடங்களை சோ்ந்த பொறுப்பாளா்களும் செவ்வாடை பக்தா்கள், தொண்டா்கள் நேரிலும், இணையத்திலும் ஒருங்கிணைந்து சிறப்பு மகா கூட்டு வழிபாடு அா்ச்சனையை நடத்தினா்.

இதில் அரக்கோணம் சோளிங்கா் ரோடு ஸ்ரீஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் தங்களது மன்ற வளாகத்தில் இருந்தவாறே இணையம் மூலம் பங்கேற்றனா். அனைவரும் குருபோற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேல் படித்து ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தினா்.

இந்நிகழ்வுக்கு ஆன்மிக இயக்க அரக்கோணம் இளைஞா் அணி தலைவா் காா்த்தி தலைமை வகித்தாா். இதில் மன்றத் தலைவா் வி.சங்கரிவரதன், நிா்வாகிகள் தசரதன், சரவணன், எஸ்,சுபாஷ், ஏ.எம்.கே.மோகனவேலன் மற்றும் லட்சுமி, தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நவீன், ஜெயந்தி, தூயவன், சுஜாதா ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

இந்நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில் அமெரிக்கா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், துபை, சுவிட்சா்லாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளை சோ்ந்த பக்தா்களும் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் இணையம் மூலம் பங்கேற்றனா் என்பது குறிப்பிடதக்கது.