டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தொடர் வெற்றிகள்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த இந்திய அணி!

டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த இந்திய அணியைப் பற்றி...

News image
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.- படம்: ஏபி.
Updated On :8 பிப்ரவரி 2026, 5:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு இந்திய அணி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.

டி20 உலக கோப்பை தொடரின் 10-வது சீசன் நேற்று (பிப். 7) மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் குரூப் ஏ முதல் டி வரை ஒரு குரூப்புக்கு தலா 5 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு மொத்தம் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தத் தொடரின் லீக் சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 280, 300 ரன்களைக் குவிக்கும் என கணித்தவர்களுக்கு மட்டுமின்றி, தனது வேகத்தைக் காட்ட முனைந்த இந்திய அணிக்கே அதிர்ச்சியளித்தது அமெரிக்கா.

சிறிய அணியான அமெரிக்காவின் பந்து வீச்சாளர்கள், இந்திய வீரர்களை திணறடித்தனர். இதனால், இந்திய அணி 77 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசியில் கேப்டன் சூரியகுமார் யாதவின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய அமெரிக்காவால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தத் தொடரில் இந்தியா, 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி உலக சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக இறுதிப்போட்டியுடன் சேர்த்து 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியின் மூலம், இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் எட்டு வெற்றிகளுடன் இருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.