டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மோசமாக விளையாடியதன் விளைவாக, (ஜிம்பாப்வே, இலங்கை உடன் தோல்வி) சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாமல் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.
மோசமாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களின் வரிசையில் முதலாவதாக கேமரூன் கிரீன் இடம் பிடித்துள்ளார்.
நம்.3-ல் கிரீன் எதற்கு?
இரண்டாவது முறையாக (2009-ல் முதல்முறை) டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறி மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஆஸி. அணியில் நம்.3 இடத்தில் கேமரூன் கிரீன் களமிறக்கப்படுகிறார். இந்த இடம் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானது. தேவைப்பட்டால் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆட வேண்டிய இடம்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா எதன் அடிப்படையில் கேமரூன் கிரீனைத் தேர்வு செய்தது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
ஆஷஸ் தொடரில் சொதப்பிய கேமரூன் கிரீன் நேரடியாக ஆஸ்திரேலிய அணியில் தேர்வானார். இது ஊழல் இல்லையா?
பேட்டிங் ஆல்ரவுண்டராகிய கிரீன் பந்துவீசுவதிலும் ஃபார்மில் இல்லை. குறிப்பாக சொல்லப்போனால், அவர் ஆஷஸ் தொடருக்குப் பிறகுதான் பந்துவீசவே முயன்றார்.
இந்த டி20 உலகக் கோப்பையில் கேமரூன் கிரீன் பேட்டிங்கில் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பேட்டிங்கில்...
பிப்.11 - அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள்
பிப்.13 ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 0 ரன்
பிப்.16 இலங்கைக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள்
பந்துவீச்சில்...
பிப்.11 - அயர்லாந்துக்கு எதிராகப் பந்துவீசவில்லை.
பிப்.13 ஜிம்பாப்வேக்கு எதிராக 1 விக்கெட் (1.1 ஓவரில்)
பிப்.16 இலங்கைக்கு எதிராகப் பந்துவீசவில்லை.
பந்துவீசவில்லை எனில் அவர் எதற்கு அணியில் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும்?
மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன் மாதிரி ஒரே மாதிரியான ஆல் ரவுண்டர்கள் எதற்கு? சொல்லப்போனால் கேப்டன் மிட்செல் மார்ஷும் இந்த ரகம்தான். கேப்டன் என்பதால் பேட்டிங் மட்டுமே செய்து பேட்டராக சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
எதன் அடிப்படையில் தேர்வானார்?
ஒருவரை அணியில் எடுக்க வேண்டுமெனில், அவர் முன்னதாக நன்றாக விளையாடி இருக்க வேண்டும். டி20யில் ஃபார்மில் இருக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் கேமரூன் கிரீன் 3 போட்டிகளில் (36,35,22) 93 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த சீசன் பிபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடவே இல்லை. ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் விளையாடவே விளையாடாத இவர் அணியில் எப்படி தேர்வானார்?
ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட்டில் 24, இரண்டாம் டெஸ்ட்டில் 45, மூன்றாம் டெஸ்ட்டில் 7, நான்காம் டெஸ்ட்டில் 36, ஐந்தாம் டெஸ்ட்டில் 59 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் மொத்தமாகவே 171 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒருநாள், டெஸ்ட்டில் நல்ல அணிகளைத் தேர்வு செய்யும்போது டி20யில் மட்டும் ஏன் சொதப்புகிறது? இந்த விஷயத்திலும் கேமரூன் கிரீனுக்கு அதிர்ஷ்டம்தான். பியூ வெப்ஸ்டர் மாதிரியான நல்ல ஆல்ரவுண்டர்களுக்கு கிரீனால் வாய்ப்பு மறுக்கப்படும் அநியாயம் நடைபெறுகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை ஜார்ஜ் பெய்லி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் நிலையில், டி20 அணியை வேறு ஒருதேர்வுக்குழு தலைவர் தேர்வு செய்வதே இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
திருந்தாத தேர்வுக்குழு!
கேமரூன் கிரீன் மட்டுமல்ல, இந்த ஆஸ்திரேலிய அணியில் பலரையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இப்படித்தான் தேர்வு செய்துள்ளது என்பது அதிர்ச்சிக்குள்ளான உண்மையாகவே இருக்கிறது.
ஒரு கிரிக்கெட் அணியை எப்படி தேர்வு செய்ய வேண்டுமென உலகத்திற்கே முன்மாதிரியாக இருந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தற்போது தனது தரத்தை இழந்து வருகிறது. அதன் பிரதிபலிப்பாகவே டி20 உலகக் கோப்பை 2024, 2026இல் நடந்த வெளியேற்றங்கள் அமைந்துள்ளன. (2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாட் கம்மின்ஸ் கிரீனை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
ஒரு பிரச்னை என்றால் அதன் ஆணி வேரை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால், அந்தப் பிரச்னை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். சுழல் பந்துவீச்சை நன்றாக விளையாடும் ஸ்மித், ரென்ஷா, பியூ வெப்ஸ்டர் புறக்கணிப்பு தோல்விக்கு உடனடி காரணமாக அமைந்துள்ளன.
கேமரூன் கிரீன் தேர்வை ஒரு உதாரணமாக வைத்துக்கொண்டால் இந்த ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியைத் தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர்தான் முதலில் ராஜிநாமா செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையெனில் 2028 உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற வாய்ப்பில்லை என்பதை இப்போதே உறுதிசெய்துவிடலாம்!
(தொடர்ச்சியாக டி20 வடிவிலான போட்டிகளில் கேமரூன் கிரீன் சொதப்பி வரும் நிலையில், அவரை கேகேஆர் அணி ரூ.25.20 கோடி ஏலத்தில் எடுத்திருக்கிறது!)
Summary
As a result of the poor performance of the Australian team in the T20 World Cup (defeats to Zimbabwe and Sri Lanka), they have been eliminated from the T20 World Cup without qualifying for the Super 8 round.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

லக்னௌ அணிக்கு எதிராக கேமரூன் கிரீன் பந்துவீசுவார்!

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது: ஆஸி. பயிற்சியாளர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



