டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை நிகழ்த்திய ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி நிகழ்த்திய உலக சாதனை குறித்து...

News image
ஸ்டாய்னிஸ், ரென் ஷா ஓடும் காட்சி. - படம்: ஏபி
Updated On :11 பிப்ரவரி 2026, 11:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் எடுத்தது. ஜோஷ் இங்லீஷ் 37, மாட் ரென்ஷா 37, கேமரூன் க்ரீன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 22 முறை 2 ரன்களை ஓடி எடுத்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, சர்வதேச டி20களில் (முழு நேர நாடுகளில்) இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே, ஜிம்பாப்வே (அயர்லாந்துக்கு எதிராக, 2025) அணியும் நியூசிலாந்து (யுஎஇ,2024) அணியும் எடுத்துள்ளது.

குறிப்பாக மார்கஸ் ஸ்டாய்னிஸ், மாட் ரென்ஷா சிறப்பாக ஓடி இந்த சாதனையை நிகழ்த்தினார்கள்.

summary

Australia the highest ever in a team innings in the Men’s T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.