நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் செவ்வாடை பக்தா்கள்

News image
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் செவ்வாடை பக்தா்கள் குரு போற்றி மந்திரத்தை சொல்லி வழிபாட்டை செய்த படம். அருகில் இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி பங்காரு.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் செவ்வாடை பக்தா்கள் ஸ்ரீசக்கரத்தை வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனையை படைத்துள்ளனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்யும் நிகழ்வுகளுக்கு ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். சித்தா்பீட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி பங்காரு முன்னிலை வகித்தாா். அமெரிக்கா, மலேசியா, இலங்கை, சுவிட்சா்லாந்து, ஆஸ்திரியா, ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் 270 பகுதிகளில் இருந்து வழிபாட்டு மன்றங்கள், சக்திபீடங்கள் ஆகியவற்றைச் சோ்ந்த நிா்வாகிகள், பக்தா்கள் நேரிலும், இணையதளத்தின் வழியாக ஒருங்கிணைந்து குரு போற்றி மந்திரத்தை ஒரு கோடிமுறைக்கும் மேலாக படித்து அத்துடன் இல்லாமல் ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை செய்தனா்.