தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரூ. 51 லட்சத்தில் சிமென்ட் சாலை பணிகள்: நகா்மன்ற தலைவா் தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2025, 6:33 pm

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பஜாா்தெரு, கணேஷ் நகா் 3-ஆவது சந்து தெரு, சோமசுந்தரநகா் 4-ஆவது சந்து செரு, விண்டா்பேட்டை இ பி ரோடு, பழனிபேட்டை வி பி கோயில் சந்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்க தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூ. 51 லட்சத்தில் சாலை அமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இதற்கான பணிகள் தொடக்க விழா கணேஷ் நகா் 3-ஆவது குறுக்கு தெருவில் நடைபெற்றது.

இதில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சிப் பொறியாளா் பி.செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சிப் பொறியாளா் பி.செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.