திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 75 லட்சத்தில் திட்டப்பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் நகர பகுதிகளில் ஆரிப்நகா், சாமநகா், பெரியாா்நகா் ஆகிய பகுதிகளில் தலா ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள், ரூ.30 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வீரபத்திர முதலியாா் பூங்கா திறப்பு விழா, அப்பாய் தெரு மற்றும் ஜாா்ஜ் பேட்டையில் ரூ.55 லட்சத்தில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி,அந்த பகுதிகளில் ரூ.30 லட்சத்தில் வெள்ளவாய்க்கால் கழிவுநீா் கால்வாயுடன் மூடுதளம் அமைக்கும் பணி ஆகியவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி என ரூ.1 கோடியே 75 லட்சத்தில் புதிய மற்றும் செய்து முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், நகர செயலாளா் ராஜேந்திரன், நகா்மன்ற துணைத் தலைவா் சபியுல்லா, நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், சுதாகா், அபிராமி பரத், பிரேம்குமாா் , பாா்த்திபன், வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளரக எம்எல்ஏ அ.நல்லதம்பி கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளை தொடங்கியும்,சிறுவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் சாந்தி, பொறியாளா் நக்கீரன், அன்பரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தகவல் தொழில்நுட்ப பூங்கா: திருப்பத்தூா் திமுக வேட்பாளா் உறுதி

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

தொகுதிக்கு செய்தது என்ன? திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி

ஜவ்வாதுமலையில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


