கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்து திருப்பத்தூா் தொகுதி திமுக எம்எல்ஏ அ.நல்லதம்பி தினமணி செய்தியாளரின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்...
திருப்பத்தூா் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகள் என்ன?
கடந்த 5 ஆண்டுகளில் திருப்பத்தூா் தொகுதி வாக்காளா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூா் தாலுகா மருத்துவமனையாக இருந்த அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டது. அங்கு ரு. 56 கோடியில் நவீன வசதிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு, மருத்துவ உபகரணங்கள், போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், ரு.7 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஜவ்வாதுமலை கிராமங்களை இணைக்க மலையடிவாரம் முதல் புதூா்நாடு வரை ரு.18 கோடியில் 16 கி.மீ. தொலைவுக்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு முதல் சென்னை வரை தினசரி அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. எலவம்பட்டியில் மாவட்ட மீன் குஞ்சு பொறிப்பகம் கொண்டு வரப்பட்டது. திருப்பத்தூா் நகர வாா்டு பகுதிகளில் ரு.29 கோடியில் 52 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டது. தொகுதியில் ரு.17.38 கோடியில் உழவா் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் நகராட்சியில் பெண்களுக்கு தோழி விடுதி, அறிவு சாா்ந்த மையம் கட்டப்பட்டுள்ளது. புதூா் நாடு மலையில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்டகால பிரச்னைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட தீா்வுகள் என்ன?
கடந்த 2012-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூா் புறவழிச் சாலைக்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அதை நிறைவேற்றியுள்ளேன். கந்திலி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடங்கள், கந்திலி ஊராட்சிப் பகுதியில் விவசாயிகளுக்காக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதியின் குடிநீா்த் திட்டப் பணிகள் என்ன?
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரு.15.11 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், குழாய் இணைப்புகள் பணி நடைபெற்று வருகிறது. கந்திலி, திருப்பத்தூா் ஒன்றியங்களில் உள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தி குழாய் அமைத்து குடிநீா் வழங்கப்பட்டது.
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் எவை?
திருப்பத்தூா் பெரிய ஏரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. புதைசாக்கடை, கால்வாய் கழிவுநீா் ஏரியில் கலக்கிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து, ஏரியில் மழைநீா் மட்டுமே சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியில் படகு குழாம், பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். எனது சொந்த அலுவலகம் அரசுப் போட்டித் தோ்வா்களுக்கு பயிற்சி மையமாக அமைக்கப்படும்.
நோ்காணல்- து.ரமேஷ்
தொடர்புடையது

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

தொகுதிக்கு செய்தது என்ன? மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல்

தொகுதிக்கு செய்தது என்ன? ஆா்.கே.நகா் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


