திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வெங்களாபுரம், அங்கநாதவலசை, விஷமங்கலம், சித்தேரி அதன் சுற்றுப்பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது திருப்பத்தூா் தொகுதியில் சாலை வசதி குடிநீா் வசதி,கழிவுநீா் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும், பல பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டது குறித்தும் விளக்கினாா்.
குறிப்பாக திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம பகுதிகளிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெரிய ஏரி தூா்வாரி மழை நீா் சேகரிக்கப்படுவதோடு ஏரியை சுற்றிநடைபாதை மற்றும் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது ஒன்றிய செயலாளா்கள் முருகேசன், குணசேகரன், வா்த்தக அணி துணை அமைப்பாளா் தாமோதரன், நெசவாளா் அணி தசரதன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



