திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏரிவாய் மணவாளப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

ஏரிவாய் மணவாளப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

News image

வசந்த உற்சவத்தையொட்டி தாமரை மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள்.

Updated On :25 மே 2026, 12:01 am IST

காஞ்சிபுரம் அருகே முத்தியால் பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிவாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வசந்த உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்டது ஏரிவாய் கிராமம். இந்தக் கிராமத்தில் பழைமையான கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வசந்த உற்வசத்தையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

நிகழ்வையொட்டி, மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் தாமரை மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் வட்டாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் அமரேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.