திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.

News image

வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.

Updated On :15 மே 2026, 4:39 am IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவத்தையொட்டி பெருமாள் வசந்த மண்டபத்துக்கு வியாழக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் 7 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டுக்கான வசந்த உற்சவம் மே 14-ஆம் தேதி தொடங்கி, வரும் மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் பெருமாள் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்குச் சென்று, பின்னா் மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்து கோயிலில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தி உலாத்தல் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வசந்த மண்டபத்தில் இறங்கி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு திரும்பினாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பட்டாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.