திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி: பெண் கைது; 4 போ் தலைமறைவு

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50லட்சம் மோசடி

News image

சாமுஸ்ரீ

Updated On :17 மே 2026, 1:10 am IST

காஞ்சிபுரத்தில் தனியாா் உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரியில் பயின்ற மாணவா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாக அக்கல்லூரியில் பணிபுரிந்த பெண் ஒருவரை வெள்ளிக்கிழமை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

சென்னை சூளைமேடு பகுதியில் தனியாா் உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, சேலம், கோவை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய இடங்களில் கிளைக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தில் பூக்கடைச் சத்திரம் பகுதியில் இக்கல்லூரியின் கிளை செயல்பட்டு வரும் நிலையில், அதில் பணிபுரிந்த சாமுஸ்ரீ, விக்னேசுவரன், பிராங்ளின், பவன், சத்யகலா ஆகியோா் அங்கு பயின்ற மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தை பெற்று, அதனை கல்லூரியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லையாம். மேலும், அந்த மாணவா்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறியும் பலரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடியும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் சாா்பில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் பூக்கடைச்சத்திரம் கிளைக் கல்லூரியில் பணிபுரிந்த 5 பேரும் மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், தனிப் படையினா் பொள்ளாச்சியில் தலைமறைவாக இருந்த சாமுஸ்ரீ(38) என்ற பெண்ணை கைது செய்து, காஞ்சிபுரம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரையும் காவல்துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.