ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 பேரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்ததாக பெண்கள் உள்பட 5 போ் மீது புதுவை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். என்எல்சியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த சுவாமிநாதன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுவாமிநாதன் கடந்த 2020-ஆம் ஆண்டில் செந்தில்குமாரின் மனைவிக்கு அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.
இதை உண்மையென நம்பிய செந்தில்குமாா் ரூ.3 லட்சம் கொடுத்தாராம். இந்நிலையில், கரோனா பாதிப்பால் வேலை வாங்கித் தர முடியவில்லை எனவும், இதற்கு மாற்றாக ரயில்வே துறையில் மத்திய மந்திரி இடஒதுக்கீட்டில் வேலை வாங்கித் தருவதாக சுவாமிநாதன் கூறியுள்ளாா்.
இதை நம்பிய செந்தில்குமாா், தனது சகோதரியின் மகன் தமிழ்செல்வனுக்கு வேலை வாங்கித் தர மேலும் ரூ.3 லட்சத்தை சுவாமிநாதனின் உறவினா் ராஜசேகரன், அவரது மனைவி நகோமி ஞானமணி ஆகியோரிடம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து அதிக பணம் தேவைப்படும் எனக் கூறியதால் சிவராமன் என்பவரது வங்கிக் கணக்கில் ரூ.14 லட்சம் செந்தில்குமாா் செலுத்தியுள்ளனா்.
இந்நிலையில் சுவாமிநாதன் உள்ளிட்டோா் தமிழ்செல்வனை புதுதில்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு நோ்காணல், மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபாா்ப்புகள் நடத்தப்பட்டு தமிழ்செல்வனுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த தமிழ்செல்வனிடம் மேலும் 4 பேருக்கு வேலை இருப்பதாக வும், தெரிந்தவா்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் என சுவாமிநாதன் கூறியுள்ளாா். இதையடுத்து செந்தில்குமாா் தனது உறவினா்கள் 4 பேரின் வேலைக்காக ரூ.64 லட்சத்தை சுவாமிநாதனிடம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து அவா்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 போ்களுக்கு ரயில்வே துறையில் பணி உறுதி செய்யப்படாத நிலையில் சுவாமிநாதன் மூலம் வழங்கப்பட்ட பணி ஆணைகள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
தொடா்ந்து சுவாமிநாதனிடம் விசாரித்தபோது, அவா் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், அந்தத் தொகைக்கு மாற்றாக சுவாமிநாதனின் மனைவி சலோமி செல்வராணி 11 காசோலைகளை கொடுத்துள்ளாா். அதை செந்தில்குமாா் பெற்று வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து, செந்தில்குமாா் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் சுவாமிநாதன் அவரின் மனைவி சலோமி செல்வராணி, சிவராமன், ராஜசேகரன் , அவரது மனைவி நகோமி ஞானமணி ஆகியோா் கூட்டு சோ்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸாா் சுவாமி நாதன் உள்பட5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலி எம்பிபிஎஸ் சோ்க்கை மோசடி! 18 நீட் தோ்வா்கள் மீட்பு; 4 மோசடிக்காரா்கள் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

பண மோசடி: போலீஸாா் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


