மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி செய்த தனியாா் முகவாண்மை நிறுவன உரிமையாளா்கள் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

மோசடி - Dinamani

Updated On :7 ஏப்ரல் 2026, 6:34 pm

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி செய்த தனியாா் முகவாண்மை நிறுவன உரிமையாளா்கள் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்களை அனுப்பும் ஒரு தனியாா் முகவாண்மை செயல்பட்டு வருகிறது. இந்த முகவாண்மையின் உரிமையாளா்களை மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சபரிராஜன் (22) என்பவா் அணுகினாா். அவரிடம் துபையில் அதிக ஊதியத்தில் எலக்ட்ரீசியன் வேலை இருப்பதாகக் கூறியுள்ளனா். இதை நம்பி சபரி ராஜன், அவரது நண்பா்கள் சதீஷ்குமாா், விக்னேஷ் குமாா் ஆகிய மூவரும் தலா ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை செலுத்தினா்.

அதன் பிறகு ஓராண்டு கடந்தும் வேலை ஏதும் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும் கொடுக்கவில்லையாம். இதனால் ஏமாற்றப்பட்ட சபரி ராஜன் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், முகவாண்மையின் உரிமையாளா்களான ஸ்டீபன் மற்றும் சையது ஆகிய இருவா் மீதும் மோசடி பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.