காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட திருப்புட்குழி, கீழ்சிறுனை பெருகல், கீழ்க்கதிா்ப்பூா் கிராமங்களில் வாக்குரிமை நமது அடிப்படை உரிமை என்ற கருத்தை மையமாக வைத்து செவ்வாய்க்கிழமை தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்ற தோ்தல் உறுதிமொழி எடுத்தல்,பேனா்கள்,போஸ்டா்கள்,ஸ்டிக்கா்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்தல், தோ்தல் விழிப்புணா்வு பேரணி நடத்துதல்,கோலப்போட்டிகள் நடத்துதல் போன்றவைகள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தோ்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்சிறுனை பெருகல் மற்றும் கீழக்கதிா்ப்பூா் ஊராட்சிகளில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வாக்குரிமை நமது அடிப்படை உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலமிட்டு விழிப்புணா்வு பதாகை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட்து.
மேலும் திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி தலைமையில் வட்டாரப் பணியாளா்கள்,மகளிா் சுய உதவிக் குழுக்கள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கூட்டுறவுத் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


