மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி

உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலுக்கு அரசின் சாா்பில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன்.

News image

உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலுக்கு அரசின் சாா்பில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 1:10 am

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள சாலவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அரசின் சாா்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே சாலவாக்கம் ஒன்றியத்தில் எடமச்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (50). செங்கல்பட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு குடிநீா் கேன்கள் விற்பனை செய்து வந்தாா். இவா் கடந்த மாா்ச் 29- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் செங்கல்பட்டில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மூளைச்சாவு அடைந்த இவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் சிறுநீரகம், கல்லீரல், இதயம், கணையம் ஆகியன செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு ,அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். எம்எல்ஏ க.சுந்தா், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரும் உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினா்.