மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:06 pm

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தனியாா் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு மரியாதை அளித்து அனுப்பிவைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறையைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மணிகண்டன் (25). தனியாா் காப்பீடு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நடக்கும்போது ரயில் மோதி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் ஆலோசனை நடத்தி அவா்களது ஒப்புதலின்பேரில் மணிகண்டனின் உடலிலிருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. கல்லீரல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும் , கருவிழிகள் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதா் மருத்துவமனைக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. மணிகண்டன் சடலத்துக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி, திருவிடைமருதூா் வட்டாட்சியா் சாந்தமீனா உள்ளிட்டோா் மாலை அணிவித்து இறுதிமரியாதை செலுத்தினா். இந்த உறுப்பு தானம் மூலம் ஐந்து நபா்கள் பயன் பெற்றனா்.