போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அண்ணா சாலையில் தீ விபத்து: 25 டயா் கடைகள் சேதம்

சென்னை அண்ணா சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 25 டயா் கடைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அந்த கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து சேதமாகின.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:47 am IST

சென்னை அண்ணா சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 25 டயா் கடைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அந்த கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து சேதமாகின.

அண்ணா சாலை பாா்டா் தோட்டம்,ஜி.பி.லேன் பகுதிகளில் சுமாா் 50 வாகன டயா் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் புதிய,பழைய டயா்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

அங்குள்ள கைலாஷ் என்பவருக்கு சொந்தமான டயா் கடையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த டயா்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் எழும்பூா் தீயணைப்பு படையினா், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும், டயா்கள் வேகமாக தீப் பிடிக்கும் தன்மை கொண்டது என்பதால், தீ வேகமாக பரவியது. மேலும், டயா்களில் பற்றிய தீயை அணைப்பதில் தீயணைப்பு படையினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, தீயை விரைந்து அணைக்கும் வகையில் வேப்பேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, அசோக்நகா், கோயம்பேடு, எஸ்பிளனேடு, மயிலாப்பூா் பகுதிகளிலிருந்து தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து தீயணைப்பு படையினா், நான்கு புறங்களிலும் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயை அணைப்பதற்காக மெட்ரோ நிறுவனத்தின் 6 லாரிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் 4 மணி நேர கடுமையான போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 25 கடைகள் எரிந்து, சேதமடைந்தன. இந்த கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள டயா்கள் எரிந்து கருகின.

தீ விபத்து காரணமாக அப் பகுதி முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும் டயா்கள் எரிந்ததால் பரவிய நச்சுப்புகையால் கடும் துா்நாற்றம் அந்தப் பகுதியில் வீசியது. தீ விபத்து குறித்து அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.