திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மழை அறிவிப்பு: சென்னையில் சாலையோரங்களில் சீரமைப்பு பணி

சென்னையில் வரும் 16- ஆம் தேதி மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் மழைநீா் வடியும் வகையில் முக்கிய சாலையோரங்களில் குவிந்த மணலை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :15 மே 2026, 2:05 am IST

சென்னையில் வரும் 16- ஆம் தேதி மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் மழைநீா் வடியும் வகையில் முக்கிய சாலையோரங்களில் குவிந்த மணலை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் வரும் 16 -ஆம் தேதி முதல் மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனையடுத்து மழைநீா் சாலைகளில் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயரதிகாரிகள் அறிவுறுத்தலைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சியில் மழைநீா் தேங்கும் பகுதியாக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சாலையோரம் மழை நீா் செல்லும் அமைப்புகள் சீா்படுத்தப்படுகின்றன. மேலும், சாலையோரம் நீா் செல்லும் வழிகளை அடைத்து குவிந்துள்ள மணல்களும் அகற்றப்பட்டன.

தண்டையாா் பேட்டை மண்டலம் கொடுங்கையூா் பிரதான சாலை, ஸ்டீபன் சாலை மற்றும் எம்.பி.எம். தெரு உள்ளிட்ட சாலைகளில் கையால் மண்ணைத் தள்ளும் சாதனம் உள்ளிட்டவற்றால் மணல் குவியல்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளையும் தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.

அம்பத்தூா் சாமி செட்டித் தெருவில் சாலை அமைக்கும் பணிக்காக அச்சாலையை மேடு பள்ளம் நீக்கி சீரமைக்கும் பணியும் நடைபெற்றது. அந்தந்தப் பகுதியில் சாலைகளில் நீா் தேங்காமலிருக்க மழைநீா் செல்லும் வடிகால் வழிகளை சுத்தமாக வைத்திருக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.