தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்

வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும்

News image

பிடிஐ

Updated On :5 ஜூன் 2026, 2:39 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகளால் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் குறிப்பிட்ட நாள்களில் 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) வழியில் 1 மணி நேரம் தாமதமாக செல்லும். வரும் சனிக்கிழமை திருச்சியிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் பகத்கீ கோதி அதிவிரைவு ரயில் (எண் 20482) வழியில் 1.30 மணி தாமதமாகச் செல்லும்.

வரும் ஜூன் 6, 9, 13, 16, 18, 21 ஆகிய தேதிகளில் ஹவுராவிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) வழியில் 50 நிமிஷம் தாமதமாக செல்லும். வரும் 23 ஆம் தேதி ஹவுராவிலிருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் ரயில் (எண் 12839) 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் சாலிமரிலிருந்து இரவு 11. 45 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22642) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் ஜூன் 23 ஆம் தேதி காட்பாடியிலிருந்து மாலை 7.25 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரயில் வழியில் 35 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

வரும் ஜூன் 4, 11, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பாட்னாவிலிருந்து புறப்படும் எா்ணாகுளம் விரைவு ரயில் (எண் 22644) வழியில் 55 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.